பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ததஜ ரியாத் மண்டலத்தில் அரங்கேற்றப்பட்டுவரும் நாடகத்தின் கிளைமாக்ஸ்!
பைசல் ,பரித் நீக்கம்!
முன்னர் ரியாத் மண்டலம் அதிரடியாகக் கலைக்கப்பட்டு நாடகம்
துவக்கப்பட்டதை நாம் அறிவோம்.ரியாத் மண்டலத்தலைவர் பைசல் உட்பட மாநில நிர்வாகிகள் பலரும் தலைமையை எதிர்த்ததாகவும்,ரியாத்திலிருந்து தாங்கள் வசூல் செய்து கொடுத்த பணத்தைப்பற்றி கணக்கு கேட்ததினால் தலைமையை மதிக்காததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.இதனால் ரியாத் மண்டலத்தில் குழப்பம் ஏற்பட்டது. மாநில தலைமை மீதான அதிருப்தி மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலும் எதிரொலித்தது.ரியாத் அமீருத்தீனை மாநிலத்தலைமை கிளைகளுக்கு அனுப்பிவைத்து நிலைமையை சமாளித்தது.
த த ஜா வின் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளுக்கு ரியாத் மண்டலம்தான் பெரிய அளவில் பெரும் உதவியைச் செய்துவருகிறது என்பதை மாநிலத்தலைமை மதிக்காமல் மூடி மறைத்து ஆடிய நாடகத்தால் சாதகமான நிலைமை ஏற்படாததால் மாநிலத்தலைமை பிரச்னையை சிறுது நாட்கள் ஆரப்போட்டது இங்கு ஆன்லைன் பீஜேயில் ஆடிய நாடகத்தைப் பற்றியும்,அடுத்து அவர்கள் எடுத்த நடவடிக்கைப் பற்றியும் உண்டான உண்மை நிலையைப் பார்ப்போம்.
சில வாரங்களுக்கு முன்னால் ரியாத் த த ஜவின் முக்கிய பொறுப்பிலுள்ளவர்களுடன் ஆன் லைனில் தமிழகத்திலுள்ள த த ஜ தலைமையிலிருந்து உரையாடல் நடந்துள்ளது அந்த உரையாடலில் தமிழகத்திலிருந்து சகோதரர் பீ ஜேயும்,எம் ஐயும்கலந்துகொண்டார்கள்.ரியாத் மண்டலத்தில்.சகோதரர் பைசல்,பரீத் போன்றோர்கள் கலந்து கொண்டார்கள்.அந்த உரையாடலில் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்படவேண்டும் அப்போது தான் நாம் ரியாத்தில் செயல்பட முடியும் என்று பீஜே சொல்ல பைசல் அன் கோஷ்டியினர் எங்களின் மீது தவறான குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள் நாங்கள் என்ன தவறுகள் செய்தோம் என்று கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லேமா நீங்கள் தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டீர்கள் தலைமைக்கு கட்டுப்படவேண்டாம்மமா அதனால்தான் இந்த நடவடிக்கை எடுத்தோம்.என்று சொல்ல பைசல் அன் கோஷ்டியினர் நாங்கள் என்ன எதிர்த்துக் கேட்டோம் சொல்லுங்கள் என்று கேட்க அதெல்லாம் ஒண்ணுமில்லேமா நீங்கள் மோசடியா பண்ணிட்டீங்கள் தலைமையை எதிர்த்தீர்கள் அதனால்தான் என்று மழுப்பலான தகவலைத்தர அத்துடன் அந்த விவாதங்கள் முடிந்து விட்டது.தற்போது ரியாத் மண்டலத்திற்கென்று நாங்கள் நான்கு நபர்களைநியமிக்கிறோம்.அவர்களின் கீழ் செயல்படுங்கள்.இன்ஷாஅல்லாஹ் தமிழகத்தில் பொதுக்குழு கூடி புதிதாகபொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து பின் ரியாத்திற்கு பொறுப்பாளர் ஒருவரை அனுப்பிவைத்து ரியாத்தில் பொதுக்குழு கூடி மண்டலத்திற்கென்று பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்போம் அப்போது உங்களைத்தேர்ந்தெடுத்தால் நல்லதுதானே என்று பீஜே சொன்னார்.நீங்களெல்லாம் ஒன்றாக செயல்பட்டு நன்றாக தஃவா பணியில் ஈடுபடுங்கமா என்றும் சொன்னார்.
பைசல் அவர்கள் தஃவா பணிகள் நடக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அங்குள்ள நிர்வாகிகளை சமாதானப் படுத்தி நாம் செயல் படுவோம் என்று சொன்னதும் அங்கிருந்த சகோதரர்கள் சமாதானமானார்கள்.பின்பு மாநிலத்தலைவர் அவர்கள் ரியாத் மண்டல அமீருத்தீன் தலைமையில் பொறுப்பாளர்கள் நான்கு பேரின் பெயர்களைஅறிவித்தார்கள்.அறிவித்தவுடன் அதில் ஒரு சிலர்கள்எங்களிடம் கேட்காமல் எப்படி போடலாம் என்று எதிர்ப்புதெரிவிக்க இந்தமாதிரி கேள்வி கடையநல்லூரைத் தவிரவேறு எங்கும் தன்னைப்பார்த்து கேட்க முடியாது என்றிருந்தபீஜே அவர்கள் இந்த கேள்வியைக் கேட்டவுடன் தன்னுடைய வெப் சைட்டை ஆப் செய்துவிட்டார்.இந்த சம்பவம் இப்படி நடந்து விட்டதே என்று அமீருத்தீன் அவர்கள் சகோதரர் பைசல்,பரீத் மற்றும் தேர்ந்தெடுக்கப்படவிருந்த நான்கு பேர்களையும் சமாதானப்படுத்தி மீண்டும் தலைமைக்குத் தொடர்புகொண்டு அந்த நான்கு பேரையும் பொறுப்பில் போடப்பட்டது.இதுதான் அன்று நடந்தது.
தற்போது 24-04-2013 அன்று தேதியிட்ட ஒரு மெயில் ததஜதலைமையகத்திலிருந்து சகோதரர் அமீருத்தீன் போன்றவர்களுக்கு
வந்துள்ளது அதில் தலைமைக்கு எதிராக செயல்பட்ட பைசலை ஒரு வருடத்திற்கு எந்த பொறுப்புக்கும்வரக்கூடாது,அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கமுடியும் நடக்கவிருக்கும்பொதுக்குழுவிலோ , நிர்வாகக் கூட்டத்திலோ கலந்துகொள்ளக்கூடாது,அவரை தஃவா பணிக்கோ,பயானுக்கோ யாரும் அழைக்கக்கூடாது,அவரும் எந்த தஃவா பணிக்குப் போகக்கூடாது அவரின் நடவடிக்கைகள் இந்தஒருவருடத்தில் எப்படி இருக்கும் என்று பார்த்து அடுத்துதான் அவர் பழையமாதிரி பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படலாம்.என்று அந்த மெயிலில் எழுதப்பட்டுள்ளது. மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது நீங்களெல்லாம் எந்த மோசடியும் செய்யலேமா தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டுவிட்டீர்கள் இதுதான் நீங்கள் செய்த தப்பு பொதுக்குழு கூடும்போது உங்களேயே தேர்ந்தெடுத்தால் நல்லதுதானம்மா என்று சொல்லிவிட்டு தற்போது அவரையும்,பரீதையும் நீக்கிவிட்டு பொதுக்குழு நடத்தக் காரணம் என்ன? அப்போ அவர்கள் கேட்டுக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது, தங்களின் குட்டு மற்றவர்களிடம் வெளிப்படித்திவிடும் என்று பயந்துதான் பொதுக்குழு கூட்ட எத்தனிக்கின்றீர்கள். இதுதான் உங்களின் நியாயமோ! அல்லாஹ் அறிவான்.இதற்காக ஒருவருடம் காத்திருப்போம்,மூன்றுமாதம் காத்திருப்போம் என்று இந்த இருவர்களும் நினைத்திருந்தால் இவர்களைப் போன்றுள்ள முட்டாள்கள் யாராக இருக்கமுடியும்?
பைசல்அவர்கள் இந்த ததஜ கட்சிக்காக எவ்வளவு பாடுபட்டவர் என்பது ரியாத் மண்டலத்திலுள்ளவர்களுக்கும்,ததஜ தலைமைக்கும் நன்றாகத் தெரியும். தமுமுகவிலிருந்து இவர்கள் வெளியே வந்து தௌஹீத் ஜமாஅத் ஆரம்பிக்கும் போது ததஜ கென்று ரியாத்தில் ஒருஆள் கூட கிடையாது.ரியாத்தில் ததஜாவுக்கு கடுமையாக உழைத்து அதற்கு ஒரு முகவரி கொடுத்தது பைசலும் பஷீர்மௌலவிதான். இது உலகறிந்த உண்மை இப்போதுள்ளசின்னப்பசங்களுக்குத் தெரியாது இந்த இரண்டு பேருமே தற்போதுநீக்கப்பட்டவர்கள்தான். அதற்காக நாங்கள் தலைக்குமேல் வைத்துஆடமுடியுமா?என்ற கேள்வி த த ஜ கேட்கலாம் என்ன அப்படி நடந்தார்கள் குர் ஆன்,ஹதீசுக்கு மாற்றமாக செயல்பட்டார்களா? இப்படியே காலம் காலமாக உழைத்த அனுபவ சாலிகளை நீக்கி நீக்கி சின்னப்பயல்களை தலைமைக்கு தேர்ந்தேடுத்ததினால்தான் இன்று ததஜ ஏழரையாகப் போய்கொண்டிருக்கிறது என்பதை ததஜ அறிந்துகொள்ளட்டும்.சகோதரர் பைசல். திருமணம் முடித்து பல ஆண்டுகளாகியும் இதுவரை அவருக்கு எந்த குழந்தையும் இல்லை குழந்தையைக் கொடுப்பது அல்லாஹ்தான் என்பதில் வேறு கருத்து இருக்கமுடியாது. ஆனால் திருமணமாகி பல வருடங்களாகி விட்டது அவர் சரியாக தன் மனைவியை சந்தித்தது இல்லை காரணம் அவர் குழந்தைக்காகத் தான் ரியாத்தில் குடும்பத்தோட தங்கியிருந்தார்.தங்கியிருக்கும் காலமெல்லாம் ததஜ நிகழ்ச்சிஎன்றால் உடனே ஓடிப்போய் காரியத்தில் இறங்குவார் இரவு பகல் என்று பாராமல் உழைத்து தன் மனைவியைக்கூட கவனிக்காமல் விடுவார் அவருடைய மனைவிகூட சிலநேரங்களில் அவரிடம் வருத்தப்படுவதுண்டு.என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போது அந்தப்பெண் மன நிறைவடைவார்கள் என்று எண்ணுகிறேன் .இனிமேலாவது பைசல் இவர்களை தெரிந்து கொள்ளட்டும்.இவர் தமுமுகவைவிட்டு வெளியே வரும்போதுகூட தமுமுகவைச் சார்ந்த முக்கிய பிரமுகர் இவரைச் சந்தித்து யாருடைய மோகத்திலேயோ போகிறீர்கள் அவர்களின் பித்தலாட்டங்கள் வெகு விரைவில் தெரியப்போகிறது என்று சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.
பைசல்,பரீத் நீக்கத்திற்கான லட்டரை அட்டாச் பைலில் பார்க்கவும்